Thursday 14 April 2011

குருபக்தி



நாம் எதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றாலும் பெரியவர்கள் மூலந்தான் தெரிந்து கொள்கிறோம். குழந்தை தன தாயார் தகப்பனார் யார் என்பதை, தாயரிடத்திலோ, தகப்பனாரிடத்திலோ அல்லது பெரியவர்கள் மூலமாகத்தான் தெரிந்தது கொள்ள முடியும். மாதா, பிதா, குரு ஆகிய இந்த மூன்று பேர்களும் நமக்குப் பிரத்தியக்ஷ தெய்வங்கள். மாதா பிதாக்கள் நம் சரீரத்தை காப்பாற்றுகிறார்கள். ரோகம் வந்தால் சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்கிறார்கள். அவர்கள் நம் தேகத்தை பொறுத்த மட்டும் ரட்சிப்பார்கள். ஆனால், இந்ததத் தேகம் திரும்பியும் திரும்பியும் ஜென்மம் எடுக்கக் காரணமாகிறது.


சம்சார மென்கிறது ஒரு பெரிய வியாதி. அதிலிருந்து தப்பிக்க, குருதான் உபகாரம் பண்ணமுடியும். எக்காலத்திலும் வியாதி இல்லாத நிலையைகொடுக்க, குரு  ஒருவரால்தான் முடியும். அவர்தான் கரையேற்ற முடியும். இவ்வளவு உயர்ந்த்தவரான குருவுக்கு உபமானம் ஏதாவது சொல்ல முடியுமா என்று பார்த்தால்-ஒருவன் பணக்காரனாக இருந்தால், குபேரன் போல பணக்காரன் என்கிறோம். அந்த மாதிரி குரு யாரைப்போல இருக்கிறார் என்றால், அவருக்கு நிதர்சனம் இல்லை. ஆனால், குருவின் சக்தி பரம்பரையாய் எல்லாச் சிஷ்யர்களுக்கும் வரக்கூடியது. குருவிடம் பக்தி பண்ணினால் வேண்டியதெல்லாம் கிடைக்கும். இதற்கு அநேக புராணக்கதைகள் உண்டு. ஓர் ஊரில் ஒரு குரு இருந்தார். அவரிடம் அநேக சிஷ்யர்கள் இருந்தார்கள். அவர்களுள் ஒரு சிஷ்யன் மிகவும் மந்தபுத்தியுள்ளவன. மற்ற சிஷ்யர்கள் எல்லா வித்தைகளையும் கிரஹித்துக்கொண்டு மிகவும் மேதாவியாய் இருந்தார்கள். படிப்பை முடித்துக்கொண்டு குருவினிடம் அனுமதி பெற்றுக்கொண்டு போய்விட்டார்கள். இந்தச் சிஷ்யன் மட்டும் சுச்ரூஷை பண்ணிக்கொண்டு குருவினிடமே இருந்தான். அவனுக்கு அனுக்ரஹகாலம் வரவில்லை. இந்தச் சமயத்தில் குருவிற்கு ஒரு பெரிய வியாதி வந்துவிட்டது. பகவான் ஸ்வப்னத்தில் தோன்றி, "நீ காசி வாசம் பண்ணினால் உன் வியாதி ஸ்வஸ்தமாகும" என்றார். இந்த மந்த புத்தியான சிஷ்யனுடன் ஐந்தாறு சிஷ்யர்கள் இருந்தார்கள். "நீங்கள் என்னைக் காசிக்கு அழைத்துக்கொண்டு போகிறீர்களா?" என்று குரு கேட்டார். அவர்கள், "எங்களால் முடியாது" என்றார்கள். அப்படித்தான் உலக ஸ்வபாவம். ஒருவனுக்குப் பலhமும் ஆரோக்கியமும் சம்பாத்தியமும் இருக்கும் வரைக்கும் பொண்டாட்டி, பிள்ளைகள், பந்துக்கள் கூட இருப்பார்கள். சம்பாத்தியம் இல்லாவிட்டால் ஒருவரும் லக்ஷ்யம் பண்ண மாட்டார்கள். ஆனால், மந்தபுத்தி, "நான் வருகிறேன்" என்றான். அவனை அழைத்துக்கொண்டு குரு காசிக்கு போனார். அவர் வியாதியோ மிகவும் கஷ்டமான வியாதி. சிஷ்யன் அவரை சிரமப்பட்டு அவரை கங்கைக்கு அழைத்துப் போய் ஸ்நானம் பண்ணி வைத்து அவருக்காக பிக்ஷை வாங்கி அவருக்கு போடுவான். இவ்வளவு செய்தும் குரு  அவனை கோபித்துக் கொள்வார். சாப்பாடு நன்றாக இல்லை என்பார். அப்படியும் தவறாமல் சிஷ்யன் குருவுக்குச் சுச்ரூஷை எல்லாம் பண்ணிக் கொண்டிருந்தான்.


ஒருநாள் சிஷ்யன் கங்கைக்கு சந்தியவந்தனத்திற்காக போகிறான். அப்பொழுது மகாவிஷ்ணு கருடரூடராய் வந்து, சிஷ்யனைப் பார்த்து, " நீ இவ்வளவு தீவீரமாக குருசுச்ரூக்ஷை பண்ணுகிறாயே! ஒரு வரம் கேள்; நான் தருகிறேன்" என்றார். சிஷ்யன் மகாவிஷ்ணுவைப் பார்த்து, "உங்களால் எனக்கு ஆகவேண்டிய காரியம் ஒன்றுமில்லை. எனக்கு உங்களிடத்திலிருந்து ஒரு வரமும் வேண்டாம்" என்று சொன்னான். உடனே மகாவிஷ்ணு சிவனிடத்தில் போய் இதைச் சொன்னார். இரண்டு பெரும் சிஷ்யனிடம் வந்தார்கள். பரமசிவன் சிஷ்யனுக்கு வரம் தருகிறேன் என்றார். மகா விஷ்ணுவுக்கு பதில் சொன்ன படியே சிவனுக்கும் பதில் சொன்னான். பரமேஸ்வரன் நிர்பந்த்தம் பண்ணினார். ஒரு தடவை, இரண்டு தடவை, பல தடவை சொல்லி பார்த்தார். அதன்பேரில், "என் குருவை கேட்கிறேன். அவர் வரம் வாங்கிக் கொள் என்றால் அவருக்கு வியாதி ஸ்வஸ்தமாக  வேண்டும் என்றுதான் கேட்பேன்" என்றான்  சிஷ்யன்.


பிறகு சிஷ்யன் குருவிடம் போய் நடந்ததை சொன்னான். "உனக்கு இஷ்டமிருந்தால் கேள்" என்று குரு சொன்னார். உடனே மகாவிஷ்ணு, பரமசிவன், மற்ற எல்லத்தேவர்களும் வந்து குருவுக்கு வியாதி ஸ்வஸ்தமாக அனுக்கிரகம் பண்ணினார்கள். சிஷ்யனுக்கு குருபக்தியால் எல்லா வித்தைகளும் கிடைத்துவிட்டது.  இதிலிருந்து குரு பக்தி பண்ணினால் வித்தை சம்பத்து எல்லாம் கிடைக்கும் என்று தெரிகிறது.


பித்ருபக்திக்கு  ஒரு கதையுண்டு. நசிகேதன் என்று ஒரு பையன். அவன் தகப்பனார் ஒரு யாகம் பண்ணினார். அந்த யாகத்தில் தனக்கு பிரியமான வஸ்த்துவை தானம் பண்ண வேண்டும். நசிகேஸ் அப்பாவைப்பார்த்து, " என்னை யாருக்குத் தானம் பண்ணப்போகிறீர்கள்?" என்று கேட்டான். ஒரு தரம் கேட்டான். ரெண்டு தரம் கேட்டான். அப்பாவுக்குக் கோபம் வந்ததுவிட்டது.  "உன்னை யமனுக்குத் தானம் பண்ணப் போகிறேன்" என்றார். ஆனால் உடனே மிகவும் துக்கப்பட்டார். அப்பொழுது நசிகேதஸ் அப்பாவைச் சமாதானம் பண்ணினான். " உங்கள் தாத்தா, தாத்தாவுக்குதாத்தா எங்கே போனார்களோ, நீங்களும் எங்கே போகப்போகிறீர்களோ, அங்கே தான் நானும் போகிறேன். அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்று யமலோகம் போனான். நசிகேதஸ் யமலோகம் போனபோது யமன் அங்கே இல்லை. பிறகு வந்தததும் நசிகேதசை பார்த்து, "எப்போது வந்தாய்"  என்று கேட்டான். "நான் வந்து மூன்று நாளாயிற்று" என்றான் நசிகேதஸ். மூன்று நாள் காத்திருந்த்ததிற்க்காக யமன் நசிகேதச்சுக்கு மூன்று வரம் கொடுத்தான் முதல் வரத்தால், "என் அப்பாவிற்கு கோபம் தனிய வேண்டும்" என்று கேட்டான். பாக்கி இரண்டு வரம் ஆத்மா தத்வத்தைபற்றி கேட்டான். யமன் முதலில் சொல்ல விரும்பவில்லை. அப்பொழுது  நசிகேதஸ், " சத்யம் என்பது எங்களுக்குத்தனா? உங்களுக்கு இல்லையா? என்று கேட்டான். பிறகு யமன் நசிகேதசுக்கு உபதேசம் பண்ணினான். நசிகேதஸ் வரத்தைப் பெற்றுக்கொண்டு மறுபடியும் தந்தையிடம் வந்தான். அவன் பிரம்ம ஞானியாய் திரும்பி வந்ததை பார்த்து, "உன் பிராப்தி எனக்குக் கிடைக்க வில்லையே, என் அஞ்ஞானம் தொலையவில்லையே! " என்று வருத்தப்பட்டார். இந்தக்கதை பித்ரு பக்தியின் விசேசத்தை காட்டுகிறது.




மாத்ருபக்தி  எல்லாரும் காட்ட வேண்டும். பிறந்தது முதல் கடைசி வரைக்கும் மாதாதான் நம்மைக் காப்பாற்றுகிறாள். நமக்கெல்லாம் மாதா, பிதா, குரு இவர்கள் பிரத்யக்ஷ தெய்வங்கள். அவர்களுக்குக் கைகர்யம் பண்ணிக் கொண்டு எல்லோரும் ஷேமமாய் இருக்க வேண்டும். 




முக்கியமான குறிப்பு:  இக்காலத்தில் ஏட்டுகல்விகளை  பயிற்றுவிக்கும் பள்ளிகூட வாத்தியாரை(உபாத்தியார்கள்) குரு என்று நினைக்கிறார்கள். இது தவறானது. வாழ்வின் அர்த்தத்தை ஞானத்தை உணர வழிகாட்டுபவரே குரு. ஆங்கிலேய ஆதிக்கத்தால் குருவிற்கும், வாத்தியாருக்கும் (உபாத்தியார்) வித்தியாசம் தெரியாமல் நம்மை வளர்த்துவிட்டனர்.

Wednesday 23 March 2011

New blog

........ to be launched from  Kali 5113, Kara varsham, Chiththirai 1,